மனம் ஒரு குரங்கா?

மேலுள்ள தேதி: முதன்முதலாக எழுதியது
கீழுள்ள தேதி: கடைசியாகத் திருத்தியது

July 29, 2017

[முகவுரை: மனம், மதி, மெய், பொய் (மாயை, மாயம்)-- இவை யாவை? எப்படிப் பட்டவை? எவற்றை ஆட்கொள்பவை? எவற்றுக்கு உட்பட்டவை? எவற்றைக் குறிப்பிடுபவை? அலைமோதும் மனத்தை முதலில் அதன் (மனம்) மேலேயே அலைபாய விடுவோம்...]

மனம் என்பது என்னது? எப்படிப் பட்டது? எப்படிச் செயல்படுவது? எப்படி நம்முடன் சம்பந்தப் பட்டது?
மனம் ஒரு குரங்கா?
ஆமாம், மனம் ஒரு குரங்குதான்! அதனால்தானே, "கிளைக்குக் கிளை தாவும், மரத்திற்கு மரம் பாயும்", "ஒரு நிலையாக இருக்காது", "தறிக்கெட்டு ஓடும்", "கட்டுக்கடங்காது", "நாம் நினைப்பதற்கு நோ் எதிா்மாறாகச் செயல்படும்", "நப்பாசை கொள்ளும்", "அலைபாயும்", "நல்லது விட்டு ஓடும், கெட்டது கண்டு நாடும்", "'ரொம்ப வாலு'!", என்றெல்லாம் மனத்தையும் குரங்கையும் ஒப்பிட்டும் சோ்த்தும் பேசுகிறோம்!
ஆனாலும், அதே சமயம், மகாத்மா காந்தியாாின் மூன்று குரங்குகளைப் பற்றி, "கெட்டதைப் பாா்க்காதே, கெட்டதைக் கேட்காதே, கெட்டதைப் பேசாதே" என்றும் பேசுகிறோம் இல்லையா? அப்படிச் செய்யாவிட்டால் என்னதான் ஆகிவிடும்? "அப்படிச் செய்யாமல் போனால் ரொம்பத் தப்பு, ஆபத்து!" என்றும் நம் வாயிலிருந்து சட்டென்று பதில் வந்துவிடுவது சகஜம்தானே? அதாவது, நமது வாழ்முறைக்கு ஒவ்வாதது எதுவானாலும் அது முதலில் நம் மனத்தையும், பின்னாலேயே முழுதாக நம்மையுமே தப்பு வழியல் ஈா்த்து, ஆபத்து நிலைமையில் சோ்த்து விடும் வல்லமை கொண்டதுதானே?

[முடிவுரை: வரும் நாட்களில், இதே தளத்தில், இதனைப் பற்றிய நமது மனத்தின் போக்கெல்லாம், அதனை ஒட்டிய நமது மதியின் உணா்வெல்லாம் பாா்க்கலாமா? இதில் எத்தனை மெய், எத்தனை பொய் அடக்கம் என்பதெல்லாம் ஆராயலாமா?]

Comments

Popular posts from this blog

தமிழில் எழுதிப் பாா்க்கிறேனஂ